Monday 2 July 2018

அறிவியல் -2





அறிவியல் -1
 ஒளியியல்

 தொடர்பான வினாக்கள் !!

1. பொருளின் பிம்பம் எதனால் உருவாகிறது? - ஒளி எதிரொளிப்பதால்

2. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் ........... - நேரான மாயப் பிம்பம்

3. ............ ஆடி எப்போதும் பொருளை விடச் சிறிய மாயபிம்பத்தை மட்டுமே உருவாக்கும். - குவி ஆடி

4. தன் மீது விழும் ஒளியை ஏறக்குறைய முழுவதுமாக எதிரொளிக்கக்கூடிய பளபளப்பான பரப்பு - ஆடி

5. ஒளி பொருள்களின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு - ஒளி எதிரொளிப்பு

6. சு ரிய அடுப்புகளில் பயன்படுவது? - குழி ஆடி

7. சமதள ஆடியில் முழு உருவத்தைக் காண சமதள ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில் ---------------ஆக இருக்க வேண்டும். - பாதியளவு

8. ஒளிச்சிதறலைக் கண்டறிந்தவர்? - ராலே

9. ஆடிகளில் தோன்றும் பிம்பம் ------ பக்க மாற்றம் கொண்டது. - இடது வலது

10. பல் மருத்துவர் பயன்படுத்தும் கருவியில் உள்ளது. - குழி ஆடி

11. ----------- ஒளியே நிறப்பிரிகையின் போது ஏழு நிறமாக பிரிகிறது. - வெள்ளை

12. வங்கி, இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடி - குவி ஆடி

13. ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கி அமைந்துள்ள இடம் - ஜவ்வாது மலை

14. வண்ணங்களின் தொகுப்பு .......... எனப்படும். - நிறமாலை

15. சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு, பொருளின் அளவிற்கு ................ ஆக இருக்கும். - சமமாக

..  ..............
 
1. மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலக்ட்ரான் பகிர்மானம்____________

A)2, 2, 8
B)2, 8, 2✔
C)8, 2, 2
D)8, 2, 1, 1

2. தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என 1789-ம் ஆண்டு வகைப்படுத்தியவர் யார் ?

A)லாவாய்சியர்✔
B)டோபரீனர்
C)நியூலேண்ட்
D)லோதர் மேயர்

3. ஜப்பானில் ஏற்பட்ட மினாமிட்டா நோய்க்கு காரணமான நஞ்சு என்ன ?

A)மெத்தில் ஐசோ சயனைடு
B)மீத்தைல் மெர்குரி✔
C)மெர்க்குரி
D)சயனைடு

4. புகையிலையில் காணப்படும் மிக முக்கியமான அடிமையாக்கும் பொருள்__________

A)பென்சோபைரின்
B)மார்ஃபின்
C)நிக்கோட்டின்✔
D)பாஸ்போவின்

5. சுவாசித்தலின் போது வெளியிடப்படும் ஆற்றல் _______ வடிவில் சேமித்து வைக்கப்படுகிறது.

A)கிளைக்கோஜன்
B)ஸ்டார்ச்
C)குளுக்கோஸ்
D)அடினோசின் ட்ரை பாஸ்பேட்✔

6. சைலத்தின் செல்களில் உயிருள்ளது எது?

A)டிரக்கீடுகள்
B)சைலம் குழாய்கள்
C)சைலம் நார்கள்
D)சைலம் பாரன்கைமா✔

7. ஆகாயத்தாமரையின் அறிவியல் பெயர் என்ன?

A)பிராசிக்கா ஓலரேசியா
B)வாசெல்லா ரூப்ரா
C)நெப்பந்தஸ் காஸியானா
D)ஐக்கார்னியா ✔கிராஸ்ஸிபெஸ்

8. எதில் ஒமேகா - 3, கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது ?

A)ரெட்மீட்
B)பால் பொருள்கள்
C)மீன்✔
D)பச்சைக் காய்கறிகள்

9. ஹாஸ்டோரியாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A)கூட்டுப் பொருள்கள்
B)சாறுண்ணித் தாவரங்கள்
C)வேதித்தற்சார்பு உயிரிகள்
D)உறிஞ்சு உறுப்புகள்✔

10. PAN என்பது யாது?

A)பெராக்ஸைடு அசிட்டிக் நைட்ரேட்
B)பெராக்ஸி அசிடைல் நைட்ரேட்✔
C)பெராக்ஸி அசிட்டிக் நைட்ரேட்
D)பெராக்ஸி அசிட்டிக் நைட்ரஸ்

11. மின்னாற்றலின் வணிக முறை அலகு என்ன ?

A)ஜூல்
B)ஜூல்/வினாடி
C)வாட்
D)கிலோவாட் மணி✔

12. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் காற்று செம்பழுப்பு நிறமாக மாறக் காரணமான மாசுப்பொருள்

A)கார்பன் - டை - ஆக்சைடு
B)நைட்ரஜன் - டை - ஆக்சைடு
C)நைட்ரஜன் ஆக்சைடு✔
D)சல்பர் - டை - ஆக்சைடு

13. மனித உடல் வெப்ப நிலையில் உருகும் இயல்புடைய உலோகம்?

A)காலியம்✔
B)மெர்குரி
C)ஜெர்மானியம்
D)சில்வர்

14. பின்வருவனவற்றில் எது பூச்சியுண்ணும் தாவரம்?

A)லைக்கன்
B)கஸ்குட்டா
C)செர்கோஸ்போரா பெர்சனேட்டா
D)ட்ரஸீரா✔

15. பீர், ஒயின் போன்ற மதுபானங்களில் காணப்படும் போதை தரும், நச்சுத் தன்மை வாய்ந்த பொருள் ?

A)மெத்தனால்
B)எத்தனால்✔
C)ஸ்பிரிட்
D)அனைத்தும்
16. கிட்டப் பார்வையைச் சரிசெய்யப் பயன்படும் லென்சு எது ?

A)குவி லென்சு
B)குழி லென்சு✔
C)A & B இரண்டும்
D)இரு குவியக் கண்ணாடி

17. 2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன் என்ன ?

A) +0.5 டையாப்டர்
B)-0.5 டையாப்டர்✔
C)+0.1 டையாப்டர்
D) -0.1 டையாப்டர்

18. கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை ஒரு வாரத்திற்கு _______ ஆகும்.

A)100 மில்லி ராண்ட்ஜன்
B)150 மில்லி ராண்ட்ஜன்
C)200 மில்லி ராண்ட்ஜன்
D)250 மில்லி ராண்ட்ஜன்✔

19. சந்திராயன் -1 எத்தனை நாட்கள் விண்ணில் செயல்பட்டது?

A)112 நாட்கள்
B)212 நாட்கள்
C)312 நாட்கள்✔
D)412 நாட்கள்

20. புவிப்பரப்பில் 50 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை _________

A)50 N
B)35 N
C)380 N
D)490 N✔
.............

  • நெல்லின் அறிவியல் பெயர்         -     ஓரைசா  சட்டைவா 
  • நெல் பயிரிடுதலில் ஜூன் முதல் செப்டம்பர் வரையுள்ள பருவகாலம் -குறுவை 
  • நெல் தண்டு துளைக்கும் பூச்சிக்கு எ.கா -   கைலோபலிகிரைசா 
  • மைக்ரோஸ்போர்கள் என்பன - மகரந்தம் 
  • படகு அல்லிகளைக் கொண்ட தாவரம்  - குரோட்டலேரியா 
  • கருவுறாக்கனி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்  -  நால் 
  • இருபுற வெடிக்கனிக்கு எ.கா  - அவரை 
  • கனியாக மாறும் மலரின் பாகம்  -  சூற்பை 
  • தாவர வளர்ச்சி ஹார்மோன்  - ஆக்ஸின் 
  • கூட்டுக்கனிக்கு எ.கா  - நுனா 

No comments:

Post a Comment