Tuesday 4 September 2018

அறிவியல் 3

1. இரும்புத் தாது? ஹேமடைட்

2. .................. வாயு ஆகாய மண்டலத்தில் அதிக சதவிகிதத்தில் உள்ளது? நைட்ரஜன்

3. ரேடார் கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
டாப்ளர் விளைவு

4. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திக்கு பரவும் நிகழ்ச்சியே
வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் , வெப்பக்கதிர் வீசல்

5. நீர்மங்கள் (அ) வாயுக்கள் அழுத்தத்தை அளவிட _____________ பயன்படுகிறது. Manometer

6. ஒரு சதுர பொருளின் புவிஈர்ப்பு மையம் எங்கு காணப்படும்? மூலை விட்டங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளி

7. ஒரு புகைவண்டி மணிக்கு 18 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அப்பொழுது 1 வினாடிக்கு பயணிக்கும் தூரம் எவ்வளவு? 5 மீட்டர்

8. வேகம் எனப்படுவது கடந்த தூரம் / எடுத்துக் கொண்ட நேரம்

9. இவற்றில் ஒன்று ஸ்கேலார் அளவு வகையச் சார்ந்தது. அடர்த்தி

10. காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது? தேனிரும்பு

11. தேனிரும்பு எனப்படுவது சுத்தமான இரும்பு

12. தாதுப் பொருட்களிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் இரும்புக்கு ______________ என்று பெயர். கனி இரும்பு

13. மிக அதிக அழுத்தத்தையும் எடையையும் தாங்கக் கூடிய ஓர் உலோகக் கலவை செம்பு, வெள்ளீயம், காரீயம்

14. செம்பையும், வெள்ளீயத்தையும் கலந்து செய்யப்படும் ஓர் கலப்பு உலோகம் _______________ வெண்கலம்

15. மின்கடத்திகளை இணைக்கும் இடத்தில் மேல் பூச்சாக பயன்படும் உலோகம் எது? காரீயம்

16. வெள்ளீயத்தின் உருகுநிலை என்ன? 230 டிகிரி செல்சியஸ்

17. வெள்ளை நிறமுடைய ஒரு மிருதுவான உலோகம் எது? அலுமினியம்

18. இவற்றில் இரும்புச்சத்து உடைய உலோகங்கள் எது? எக்கு, இரும்பு

19. வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தா பொருள் எது? கந்தகம்

20. கிழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை உலோகத்தை சார்ந்தது அல்ல கந்தகம்

21. சாதாரண வெப்ப நிலையில் உலோகங்கள் __________ நிலையில் இருக்கும். திண்மம்

22. வானொலிப் பெட்டியில் வால்வுகள் தயாரிக்கப் பயன்படுவது? நிக்கல் எஃகு

23. பின்வருவனவற்றுள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது....................? புரோமின்

24. அலுமினியத்தின் முக்கிய தாது? பாக்ஸைட்

25. கதிரியக்கம் _________ கருவியால் அளக்கப்படுகிறது கைகர் எண்ணி

26. மாறுதிரசை மின்னோட்டம் நேர் மின்னோட்டமாக மாற்றப்படுவது? திருத்தி

27. 14 செ.மீ பக்க நீளமுள்ள ஒரு சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு? 204 ச.செ.மீ

28. ஒரு மின்மாற்றி பயன்படுவது? AC மின்னழுத்ததை அதிகரிக்க அல்லது குறைக்க

29. ஒளி நேர்கோட்டில் செல்வதுபோல் தோன்றக் காரணம்? குறைந்த திசைவேகம்

30. இயற்கை ரப்பர் கீழ்க்கண்டவற்றின் எதனுடைய பல்படியாகும்? ஐசோபிரீன்

31. ரேடார் கருவி எதிரியின் விமானம் வருவதை அறிவது? ரேடியோ அலையால்

32. X - கதிர்களைக் கண்டறிந்தவர்? ரான்ட்ஜன்

33. வாயுவின் விதியைத் தந்தவர்? பாயில்

34. 27 °C ஐ பின்வருமாறு கூறலாம்? 300 K
35. கீழ்க்கண்டவற்றுள் நேர்மின் அயனியைக் கண்டறிக? K+

36. சிமெண்ட் தொழிலில் பயன்படும் மூலப்பொருள்? சுண்ணாம்புக் கல்

37. டெஸ்லா என்ற அலகு காந்த தூண்டல்

38. கிலோ வாட் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனுடைய அலகாகும்? திறன்

39. லெக்லாஞ்சே மின்கலத்தில் கேதோடாகப் பயன்படுவது? துத்தநாகம்

40. டீசல் என்ஜினின் பயனுறு திறன்? 40%

41. காற்றாலைகள் அமைக்க சராசரியாக ஆண்டு முழுவதும் குறைந்தது ___ அளவு காற்று வீச வேண்டும் 18 கி.மீ / மணி

42. தின்மத்தின் மிகக் குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது? இணைத்திறன் பட்டை

43. எந்த தொழிலில் தூய்மையான சிலிகான் பயன்படுத்தப் படுகிறது? மின் அணுத் தொழில்

44. __________ தாது ரப்பருடன் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது? கந்தகம்

45. துகள்கள் அற்ற கதிர்கள்? காமா

46. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண்? 50 Hz (ஹெட்ஸ்)

47. மின்சுமை இல்லாத துகள்? நியூட்ரான்

48. மின்னாக்கி எந்த ஆற்றலை எந்த ஆற்றலாக மாற்றுகிறது? இயந்திர ஆற்றலிலிருந்து - மின் ஆற்றல்

49. மின்னழுத்ததின் அலகு? வோல்ட்

No comments:

Post a Comment